Friday, July 17, 2009

வேலு நாச்சியார் (Velu Nachiyar)

வீரமங்கை வேலுநாச்சியார் பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி ஆவார்.

இளமை
1730லஆம் ஆண்டு, இராமநாதபுரம் மன்னர் செல்ல முத்து சேதுபதி - சக்கந்தி முத்தாத்தாளுக்கு ஒரே பெண் மகவாக பிறந்தார் வேலுநாச்சியார். எனினும் ஆண் வாரிசு போலவே வளர்க்கப்பட்டார். ஆயுதப் பயிற்சி பெற்றார்; பல மொழிகள் கற்றார். 1746ல் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதருக்கு மனைவியானார்.

வெள்ளையர் படையெடுப்பு
1772ல் ஐரோப்பியரின் படையெடுப்பால் ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளிக்க இடம் மாறி மாறிச் சென்றார் வேலுநாச்சியார். இந்த படையெடுப்பை எதிர்க்க நினைத்த வேலுநாச்சியார் அவர்கள் விருப்பாட்சியில் தங்கி ஹைதர் அலியைச் சந்தித்து உருது மொழியில் வெள்ளையர் எதிர்ப்பு பற்றி பேசி விளக்கினார். வேலு நாச்சியாரின் உருது மொழித் திறமையைக் கண்டு ஆச்சர்யப்பட்ட ஹைதர்அலி உதவிகள் பல செய்வதாக உறுதியளித்தார். ஏழாண்டு காலம் திண்டுக்கல் கோட்டை, விருப்பாட்சிக் கோட்டை, அய்யம்பாளையம் கோட்டை என இடம் மாறி மாறி முகாமிட்டு, வெள்ளையர்களை விவேகத்துடன் எதிர்த்தார். இதற்கிடையில் தமது எட்டு வயது மகளையும் பாதுகாக்க வேண்டிய நிலை அவருக்கு இருந்தது. அமைச்சர் தாண்டவராயன் பிள்ளையின் முயற்சியினால் சிவகங்கை மக்கள் பிரதிநிதிகள் வேலுநாச்சியாரோடு கலந்து பேசியதன் மூலம் வீரமிக்க விடுதலைப்படை ஒன்று உருவாக்கப்பட்டது. மருது சகோதரர்களுடன், வேலுநாச்சியாரே போராட்டத்துக்கு தலைமை தாங்கினார்.

படை திரட்டல்
1780 ஐப்பசித் திங்கள் ஐந்தாம் நாள் வேலுநாச்சியார் தலைமையில் ஒரு படை திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டது. ஹைதர் அலி 5000 குதிரை வீரர்களையும் 5000 போர்வீரர்களையும், பீரங்கிப்படை ஒன்றையும் அனுப்பி வைத்தார். படை காளையார் கோயிலை கைப்பற்றியது. சிவகங்கையில் வேலுநாச்சியார், தம்மைக் காட்டிக் கொடுத்காது வெள்ளையரால் வெட்டுண்ட உடையாளுக்கு வீரக்கல் ஒன்றை நட்டு, தமது திருமாங்கல்யத்தை முதல் காணிக்கையாகச் செலுத்தி அஞ்சலி செலுத்தினார். நாச்சியார் தொடர்ந்து பூஜை செய்ய உத்தரவிட்டார். இந்தக் கோயில் கொல்லங்குடி வெட்டையார் 'காளியம்மாள்' என்று அழைக்கப்படுகிறது. இறுதியாக சிவகங்கை நகரைக் கைப்பற்ற சின்னமருது, பெரிய மருது, வேலுநாச்சியார் அவர்கள் தரைலமையில் படை திரட்டப்பட்டது. சிவகங்கை அரண்மைனயில் விஜயதசமி, நவராத்திரி விழாவிற்காக கூடிய மக்கள் கூட்டத்தில் பெண்கள் படை மாறுவேடத்தில் புகுந்து அதில் குயிலி என்ற பெண் தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்தாள். வேலுநாச்சியார், தனது ஐம்பதாவது வயதில், தனது கணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் தோற்கடித்தார்.

வேலு நாச்சியார் கைப்பற்றிய தமது நாட்டிற்கு பெரிய மருதுவை தளபதியாகவும், சின்னமருதுவை அமைச்சராகவும்த நியமித்தார். வேலுநாச்சியார் மகள் வெள்ளச்சிக்கும் சக்கந்தி வேங்கண் தேவருக்கும் திருமணம் செய்து வைத்தார். 1780-1789 வரை ஆட்சியில் இருந்தார். 1789-ல் மருமகனுக்கு ஆட்சிப்பொறுப்பை மாற்றிக் கொடுத்தார்.

இறுதி நாட்கள்

1790-ல் அவரது மகளின் மறைவினால் மனமுடைந்த வேலுநாச்சியார் இதய நோயாளியாகி சிகிச்சைக்காக பிரான்ஸ் நாட்டுக்குச் சென்றார். 1793-ல் வேலு நாச்சியாரின் பேத்தியின் மரணத்தால் நாச்சியாருக்கு துயரம் அதிகமானது. அதனால் விருப்பாட்சி அரண்மனையில் தங்கினார். பெரும் போராட்டங்களை நடத்தி நாட்டை மீட்ட வேலுநாச்சியார் 25 டிசம்பர் 1796 அன்று இறந்தார். இதன் தொடர்ச்சியாக இன்று வரை சிவகங்கைச் சீமையை ஆட்சி புரிந்த மன்னர்களின் வம்சாவழிப்பட்டியல் கீழே உள்ளது.

வ. வே. சு. ஐயர் (V.V.S. Iyar)

வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் (வ. வே. சு. ஐயர், ஏப்ரல் 2 1881 — ஜூன் 4 1925) இந்திய விடுதலைக்காக முதன்மை பங்காற்றியவரும், சிறந்த இலக்கிய வாதியும், மொழி பெயர்ப்பாளரும் ஆவார். இவர் தமிழகத்திலுள்ள திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்தவர்."

பிறப்பு
வெங்கடேச சுப்பிரமணியம் திருச்சி வரகனேரியைச் சேர்ந்த வேங்கடேச ஐயருக்கும், சின்னாளப்பட்டி எனும் ஊரைச் சேர்ந்த காமாட்சியம்மாளுக்கும் 2.4.1881ல் பிறந்தார். வேங்கடேச ஐயர் எம்.ஏ. தேர்ச்சி பெற்று, திருச்சி வரகனேரி வர்த்தக சங்கம், ஜனோபகார நிதி முதலிய நிறுவனங்களை நடத்தி வந்தவர்.

கல்வி
வ வே சுப்பிரமணியம் திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் கல்வி பயின்றார். தம் பன்னிரண்டாம் வயதில் தகுதித் தேர்வு எழுதி (மெட்ரிகுலேஷன்) தேறினார். அக்கால மரபையொட்டி அவ்வயதிலேயே அத்தை மகள் பாக்கியலட்சுமி அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார். பதினாறாம் வயதில் பி.ஏ. பட்டத் தேர்வில் மாகாணத்தில் முதலாவதாகத் தேறினார். பின்னர் சென்னை சென்று வக்கீல் பரீட்சையில் முதல் பிரிவில் தேறி, சென்னை மாநகர் ஜில்லா கோட்டில் முதல் வகுப்பு ப்ளீடராகச் சேர்ந்து வக்கீல் தொழில் நடத்தினார்.

கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம், சமஸ்கிருத, தமிழ் மொழிகளில் ஆழ்ந்த புலமை பெற்றவராய் விளங்கினார்.

தொழில்
வழக்கறிஞர் பட்டம் பெற்றதும் பத்தொன்பதாம் வயதில் திருச்சி திரும்பி வழக்கறிஞர் தொழில் நடத்தி வந்தார். இவரின் மைத்துனர் பசுபதி ஐயர் என்பார், இவரை ரங்கூனுக்கு அழைத்துச் சென்று பாரிஸ்டர் கல்வி பயில வைக்கத் திட்டமிட்டார். 1907ல் வ.வே.சு. ரங்கூன் வழி இலண்டன் சென்றார். லண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில் லண்டன் சென்று அங்கு இந்தியா ஹவுஸில் தங்கினார்.

லண்டனில் அரசியல் போராட்டம்
பட்டம் பெற வந்த வ.வே.சுவை சுதந்திர வீரராக்கியது இந்தியா ஹவுஸ். அங்கு அடிக்கடி சென்றபோது தீவிர தேசிய இயக்கவாதியான வீர சாவர்க்கர் போன்ற புரட்சி வீரர்களின் தொடர்பு அவருக்குக் கிடைத்தது. ஷாம்ஜி கிருஷ்ணவர்மா, சாவர்க்கர், டி.எஸ்.எஸ். ராஜன் போன்றவர்களின் நட்பு, இந்தியா ஹவுஸில் ரகசியமாக இயங்கி வந்த அபிநவபாரத் சங்கத்தில் வ.வே.சுவை உறுப்பினராகச் சேரவைத்தது. விபின் சந்த்ரபால், லாலா ஹரிதயாள், மேடம் காமா முதலியோருடன் ஒன்றிப் பழகினார். இவர் இலண்டனில் வாழ்ந்த காலத்தில் பாரதியாரின் இந்தியா பத்திரிகைக்கு எழுச்சியூட்டும் கட்டுரைகள் எழுதி அனுப்பி வந்தார்.

அபிநவபாரத் சங்கம் இந்திய விடுதலைக்கான இளைஞர்களின் களமாகத் திகழ்ந்தது. வ.வே.சு ராணுவ வீரருக்குரிய போர்ப் பயிற்சிகளை இங்குக் கற்றுக் கொண்டார். அவர் மனதிலும் தேசிய வெறி குடியேற, பாரிஸ்டர் படிப்பு அவருக்கு இரண்டாவது பட்சமாகியது. ஆயினும் படிப்பை அவர் புறக்கணிக்காமல் படித்து முடித்தார். தேர்வில் வெற்றியும் பெற்றார்.

இலண்டன் இந்தியா விடுதியில் தங்கியிருந்த அவருடன் 30 பேர் சேர்ந்து விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டனர். வ.வே.சுவும் துப்பாக்கிப் பயிற்சி பெற்றார். மற்ற புரட்சி இளைஞர்களுக்கும் அப்பயிற்சியை அளித்தார்.

1909ல் தசரா பண்டிகையைத் தேசிய விழாவாக இந்தியா ஹவுசில் கொண்டாடினர். அதில் சிறப்பு விருந்தினராகக் காந்தி அடிகளை அழைத்து வந்து பேச வைத்தனர். இதே ஆண்டில் கர்னல் கர்ஸான் வில்லி லண்டனில் சுடப்பட்டார். இவரைச் சுட்டுக்கொன்றவர் மதன்லால் திங்காரா என்ற இந்திய ஹவுஸ் மாணவர். மதன்லால் திங்கராவை இந்த வீரச் செயலுக்கு தயார் செய்தவர் வ வே சு. மாபெரும் வீரரான திங்கரா, வ வே சு வைத்த பல சோதனைகளில் வென்று இச்செயலுக்குத் தகுதியானவர் என்பதை நிறுவியபின் இச்செயலுக்குப் பணிக்கப்பட்டார். உதாரணமாக, மதன்லால் திங்கராவின் புறங்கையில் குத்தப்பட்ட ஊசியானது கையின் மறுபுறம் வந்தபோதிலும் புன்னகைபூத்த முகத்தோடு இவ்வேதனையை மதன்லால் திங்கரா தாங்கிகொண்ட நிகழ்வை கூறலாம். திங்க்ராவிற்கு மரணதண்டனை அளிக்கப் பெற்றதும், அந்த வீர இளைஞர் தூக்குமேடை ஏறி, வீர மரணத்தைத் தழுவினார்.

திங்கரா, கர்ஸன் வைலியைக் கொன்றதன் விளைவாக, சாவர்க்கர் கைது செய்யப்பட்டார். இந்தியர்களை தாழ்வாக நடத்திய கர்ஸானின் துர்மரணத்தின் காரணமாக பலரும் தலைமறைவாயினர்.

பாரிஸ்டர் பட்டமளிப்பு விழாவில் ராஜ விசுவாசப் பிரமாணம் எடுத்துக் கொண்டால் மட்டுமே பட்டம் அளிப்பதாக வழக்கம். பாரிஸ்டர் தேர்வில் வெற்றி பெற்ற வ.வே.சு. பட்டமளிப்பு விழாவில் அரச நம்பிக்கையாளன் உறுதிமொழி (ராஜவிசுவாசப் பிரமாணம்) எடுக்க மறுத்தார். பட்டமும் பெறவில்லை.

பட்டமளிப்பு விழாவில் ராஜவிசுவாசப் பிரமாணம் எடுக்க மறுத்ததால் அவரைக் கைது செய்ய ஆங்கில அரசு ஆணையிட்டது. சாவர்க்கரை மாறுவேடத்தில் வ.வே.சு சந்தித்தார். அப்போது சாவர்க்கர் வ.வே.சு.வை எவ்வாறாயினும் இந்தியா தப்பிச் செல்லக் கூறினார். அவ்வண்ணம் வ.வே.சுவும் சீக்கியர் போல் வேடம் பூண்டு பிரான்ஸ் சென்றார். அங்கே அவரை வேவுபார்க்க வந்தவனிடம் தாம் வீர விக்ரம்சிங் என்ற சீக்கியர் என்று கூறி ஏமாற்றி, துருக்கி, கொழும்பு வழியாகப் பயணம் செய்தார். அப்பயணம் வீரதீர சாகசச் செயல்கள் நிறைந்தது. மாறுவேடத்தில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் பல பிரிட்டிஷ் உளவாளிகளை வெற்றிகரமாக எமாற்றி பயணம் செய்த பின், 1910 அக்டோபர் 9 இல் வ.வே.சு. புதுச்சேரி வந்தார்.

புதுச்சேரி அரசியல் வாழ்க்கை
மண்டயம் ஸ்ரீநிவாசாச்சாரியார், அரவிந்த கோஷ், மகாகவி பாரதியார், நீலகண்ட பிரம்மச்சாரி, வ. ரா. போன்ற மற்ற வீரர்களோடு இணைந்து இந்திய விடுதலைக்குப் போராடினார். இங்கும் வ.வே.சு. இந்தியா பத்திரிகைக்கு தொடர்ந்து எழுதி வந்தார்.

இங்கு தர்மாலயம் என்ற இல்லம் அமைத்து சுதந்திரப்போருக்கு வீரர்களைத் தயாரிக்கும் விதமாக அவர்களுக்குக் குத்துச்சண்டை, குஸ்தி, சிலம்பம், துப்பாக்கிச் சுடுதல் போன்ற பயிற்சிகளை வ.வே.சு. கற்பித்தார். வ.வே.சு. தமது உட்கிடக்கையாக விளங்கிய கெரில்லாப் புரட்சி முறைகளை முதிர்ந்தவர்க்கு புகட்டியதுடன், துப்பாக்கிச் சுடும் பயிற்சியை விடுதலை வேட்கிகளுக்கு அளித்தார். “சங்கேத பாஷை”யில் செய்தி பரப்பி தேச விடுதலை உணர்வுக்கு உரம் இட்டு ஊக்கி வளர்த்தார்.

முதல் உலகப் போரின்போது, வவேசுவை அல்ஜியர்ஜுக்கு நாடு கடத்த ஆங்கில அரசு சூழ்ச்சி செய்து, பிரஞ்சு அரசை அணுகிற்று. இது கைகூடவில்லை. கலெக்டர் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் என்னும் வீர இளைஞனுக்குப் புதுச்சேரியில் முன்னதாக வ.வே.சு. துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்தது குறிப்பிடத்தக்கது. பாண்டிச்சேரியில் கரடிக்குப்பம் என்றறியப்படும் கருவடிக்குப்பத்தில் இந்தப் பயிற்சி நடந்தது. கலெக்டர் ஆஷைக் கொல்ல வாஞ்சிநாதன் பயன்படுத்திய துப்பாக்கி பிரெஞ்சு நாட்டுத் தயாரிப்பு. வவேசு தந்தது என்றொரு குறிப்பு இருக்கிறது. ஆஷ் படுகொலைக்குப் பிறகு புதுச்சேரியில் தீவிரவாத குழுக்கள் இயங்க முடியாத நிலை உருவானது. ஆனால், இவ்வளவு இருந்த போதிலும் கொலை வழக்கில் வவேசு ஐயருடைய பெயர் வரவே இல்லை என்பதும் நோக்கத்தக்கது.

புதுச்சேரியில் ஆங்கிலேய உளவாளிகளால் வவேசு மட்டுமன்றி அவரின் மனைவி திருமதி பாக்கியலஷ்மி அம்மாளும் பல துன்பங்களை அடைந்தார்.

அகிம்சாவாதியாதல்
இப்போது அவருக்கு மகாத்மா காந்தியை இரண்டாம் முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார். முதல் உலகப்போர் முடிந்ததும், வ.வே.சு பிரிட்டிஷ் இந்தியா வர அனுமதிக்கப்பட்டார். 14 ஆண்டுகள் தான் பிறந்து வளர்ந்த வீட்டிற்கு வரமுடியாமல் மற்ற மனிதர்களுக்காகப் போராட்டத்திற்கு வாழ்வை அர்ப்பணித்த வவேசு 1920ல் பொது மன்னிப்புப் பெற்று திருச்சிராப்பள்ளியிலுள்ள வரகனேரி இல்லம் வந்தார்.

ஏதேனும் ஒருவகையில் சுதந்திரத்திற்குப் போராடிக்கொண்டே இருப்பது என்று தீர்மானித்த அவர் காங்கிரஸ் இயக்கத்தில் பங்கு கொண்டு உழைத்தார். தமிழ்த்தென்றல் திரு. வி. கலியாணசுந்தரனார், தேசபக்தன் இதழிலிருந்து விலகவும், அதன் ஆசிரியர் பொறுப்பை வ.வே.சு ஏற்றார். 1920ல் சென்னை சென்று தேசபக்தன் இதழின் ஆசிரியராகச் சிலகாலம் பணியாற்றினார். பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக பல வீரர்களை உருவாக்கிய கட்டுரைகளை எழுதினார். இதனால் ஆங்கில அரசு அவரை காவுகொள்ள நினைத்தது. தேசபக்தனில் அவர் எழுதாத ஓர் எழுச்சிக் கட்டுரையைக் காட்டி, இராஜதுவேஷ குற்றம் சாட்டி பெல்லாரி சிறைக்கு அனுப்பியது எதேச்சதிகார ஆங்கிலேய அரசு. பெல்லாரி சிறையில் சிலகாலம் இருந்து, பின்னர் விடுதலையானார்.

பாரதியுடன் நட்பு
மகாகவி பாரதியார் தலித்தாகப் பிறந்த ரா.கனகலிங்கத்துக்குப் பூணூல் அணிவித்த புண்ணிய நிகழ்வை தலைமை தாங்கி நடத்தினார் வவேசு.

பாரதிக்கு உடல் நலமில்லை என்ற செய்தி பல நண்பர்களுக்குத் தாமதமாகவே தெரிந்தது. தாம் எழுதாத ஒரு தலையங்கத்திற்காக செப்டம்பர் 11ம் தேதி கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்று கொண்டிருந்த வ.வே.சு, நிலைமையறிந்து, போகும் வழியில், போலீஸ் துணையோடு பாரதியின் வீட்டுக்கு வந்து அவரைப் பார்த்தார். அவரது குடும்பத்தாருடன் பேசினார். அவர்கள் பாரதி மருந்துட்கொள்ள மறுப்பதைச் சொன்னர்கள். "பாரதி, நீ மருந்து சாப்பிட மாட்டேன் என்கிறாயாமே? சாப்பிட்டு உடம்பைத் தேற்றிக் கொள்ள வேண்டாமா?" என்று பரிவோடு அறிவுறுத்திவிட்டு வேதனையோடு சிறை சென்றார்."

வவேசுவின் உருவ அமைப்பு
வ.வே.சு கம்பீரமான தோற்றம் உடையவர். மார்பை எட்டிப் பார்க்கும் அழகான கருப்பு தாடி; அன்பு ஒழுகும் கண்கள்; செருகிக் கட்டப்பட்ட முரட்டுக் கதர்; மேலே உடம்பு முழுவதும் போர்த்தப்பட்ட ஓர் ஆடை; நெற்றியில் பிறைசந்திரக்குறி; குளிர்ந்த பார்வை; உண்மை முனிவரின் தோற்றம்; நிமிர்ந்த நடை, ஒரு தனி அழகு கொண்டது; நடப்பதற்கும் நடை என்று பெயர் ஒழுக்கத்திற்கும் தமிழில் நடையென்று பெயர்; இரண்டிலும் சாலச் சிறந்தவர் வ.வே.சு.

தமிழ் குருகுலமும் ஒப்பற்ற பணிகளும்
1922ல் சேரன் மாதேவியில் தமிழ்க்குருகுலம் என்ற கல்வி நிலையத்தை தொடங்கினார். அதை நிர்வகிக்க பரத்வாஜ் ஆசிரமத்தையும் அமைத்தார். 1924ல் பாலபாரதி என்ற இதழைத் தொடங்கினார். தொழிற்கல்வியும் அறிவுக் கல்வியும் மாணவர்க்கு அளித்தார்.

தமிழ் குருகுலத்தில் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான முறையில் நன்னெறிகளும், அறிவியலும், கலை இலக்கியங்களும், உடல்வலிவுப் பயிற்சிகளும் போதிக்கப்பட்டன.

தமிழிலக்கிய பங்களிப்பு
மிகச் சிறந்த சுதந்திரப் போராட்ட வீரராகத் திகழ்ந்ததைப் போலவே வ.வே.சு. இலக்கியப் புலமையிலும் சிறந்து விளங்கினார்.

* திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
* குளத்தங்கரை அரசமரம் என்கின்ற பெயரில் சிறுகதையை வெளியிட்டார். இதுவே முதன்முதலில் வெளிவந்த தமிழ் சிறுகதையாகும்.
* இவரது மங்கையர்க்கரசியின் காதல் என்ற புத்தகம் தமிழில் வெளிவந்த முதலாவது சிறுகதைத் தொகுதியாகும்.
* பெல்லாரி சிறையில் ஒன்பது திங்கள் சிறைப்பட்ட அவர், கம்பராமாயண ஆராய்ச்சி எனும் அரிய நூலை ஆங்கிலத்தில் எழுதினார். கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம், சமஸ்கிருத மொழிக் காவியங்களை மூலமொழியிலேயே படித்தறிந்த விடுதலைப் போராட்ட வீரரான வ.வே.சு. ஒவ்வொரு பாத்திரமாக ஆராய்ந்து அழகிய ஆங்கிலக் கட்டுரைகளாக வடித்தார்.
* கம்பராமாயணப் பாலகாண்டப் பதப்பிரிப்புப் பதிப்பையும் கொணர்ந்தார்.
* கம்ப நிலையம் என்ற நூல் விற்பனையகத்தைத் தொடங்கி ஏராளமான நூல்களை வெளியிட்டார்.
* பல மொழிபெயர்ப்பு நூல்களை வடித்தார்.
* லண்டனில் இருந்தபோது பாரதியின் இந்தியா இதழில் லண்டன் கடிதம் என்ற பெயரில் தொடர்ந்து எழுதினார்.
* மாஜினியின் சுயசரிதை, கரிபாலிடியின் வரலாறு, நெப்போலியன், தன்னம்பிக்கை, "கம்பராமாயணம் - ஓர் ஆராய்ச்சி" போன்ற நூல்களை எழுதியுள்ளார்.
* பாரதி எனும் மாபெரும் கவிஞரின் பெருமையை அக்காலத்திலேயே அறிந்து அவர் கவிதைகளை முக்கிய ஆக்கங்களாகக் கருதிச் சில திறனாய்வுக் குறிப்புகளை அவரது சமகாலத்திலேயே பதிவுசெய்தார்.

மறைவு
தம் குருகுல மாணவர்களுடன் 3.6.1925 அன்று அம்பாசமுத்திரம் அருவி காணத் தம் மகள் சுபத்திராவுடன், மகன் கிருஷ்ணமூர்த்தியையும் அழைத்துக் கொண்டு சுற்றுலா சென்றார். சுற்றுலாவைக்கூட மாணவர்களை வீரர்களாக உருவாக்கும் ஒரு வாய்ப்பாகக் கருதிய வவேசு அவர்கள் அகண்ட அருவியை பயமின்றி தாண்டுமாறு மாணாக்கருக்குப் பணித்தார். சிறுபெண்ணான சுபத்திரை தானும் அவ்வருவியை எந்த உதவியும் இன்றி தாண்ட விரும்பினார். தந்தையான வவேசுவின் தயக்கத்தைக் கண்டு "ஆணுக்குப் பெண் சரி நிகர் சமானம் என்று கூறும் நீங்கள் பெண் என்பதால் என்னை தாண்ட அனுமதிக்காமலிருக்கிறீர்களா" என்று கூறியதால் உவகை அடைந்த பெருமான் தன் பெண் குழந்தைக்கும் அருவி தாண்ட அனுமதி தந்தார். சிறு பெண்ணான சுபத்திரை அம்முயற்சியில் தவறி அருவியில் விழுந்தார். அவரைக் காப்பாற்ற குதித்த வவேசுவும் அவ்வருவியிலேயே அமரத்துவம் எய்தினர். வ.வே.சு என்னும் சுதந்திர வீரவிளக்கு பாபநாசம் அருவியில் தவறி விழுந்த தனது மகளைக் காப்பாற்ற முனைந்து 1925 ஜூன் 4ல் அணைந்தது.

சுப்பிரமணியன் சந்திரசேகர் (Subrahmanyan Chandrasekhar)

சுப்பிரமணியன் சந்திரசேகர் (அக்டோபர் 19, 1910 - ஆகஸ்ட் 21, 1995) வானியல்-இயற்பியலாளர் ஆவார். இவர் பிரித்தானிய இந்தியாவில் லாகூரில் பிறந்தவர். ஐக்கிய அமெரிக்கா, சிக்காகோவில் தனது வாழ்நாளின் பெரும் பகுதியைக் கழித்தவர் விண்மீன்கள் பற்றிய இவரது ஆய்விற்காக இவருக்கும் வில்லியம் ஃபௌலருக்கும் 1983 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

19377 இலிருந்து 1995 இல் இறக்கும் வரை சிக்காகோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். இவர் 1953இலிருந்து ஐக்கிய அமெரிக்கக் குடிமகனாவார்.

வாழ்க்கைக் குறிப்பு
C. சுப்பிரமணியன் ஐயருக்கும் சீதாலட்சுமி அம்மையாருக்கும் பிறந்தவர் சந்திரசேகர். இவருடன் கூடப் பிறந்தவர்கள் ஆறு சகோதரிகளும் (ராஜலட்சுமி, பாலபார்வதி, சாரதா, வித்யா, சாவித்திரி, மற்றும் சுந்தரி) மூன்று சகோதரர்களும் (விசுவநாதன், பாலகிருஷ்ணன், மற்றும் ராமநாதன்) [3]. லாகூரில் ஐந்து வருடங்களும், லக்னோவில் இரண்டு வருடங்களும் வாழ்ந்தபின், அவரது குடும்பம் சென்னை வந்தடைந்தது. அவரது ஆரம்பப் படிப்பு வீட்டில் தொடங்கியது; பதினோராம் வயதில் அவர் திருவல்லிக்கேணியிலுள்ள இந்து உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார்.

மாநிலக்கல்லூரியில் மேல்நிலைப் படிப்பு முடிந்ததும், 1927-ல் இளங்கலை (B.A. Honours) இயற்பியல் படிப்பை அதே கல்லூரியில் தொடர்ந்தார். இப்படிப்பின் போதுதான் 1928ல் அவரது சித்தப்பா சர். சி. வி. இராமனுக்கு நோபல் பரிசு கிடைத்தது.

1928-ல், ஆர்னோல்ட் சம்மர்ஃபெல்ட் (Arnold Sommerfeld) இந்தியா வந்திருந்த போது, சென்னையில் மாநிலக் கல்லூரியில் சொற்பொழிவு ஆற்றினார். ஏற்கெனவே அவருடைய புத்தகத்தைப் படித்திருந்த சந்திரசேகர், அவரைச் சந்தித்து இயற்பியலில் நிகழ்ந்திருந்த புதிய ஆராய்ச்சிகளைப் பற்றி அறிந்ததுடன், அவை பற்றிய புத்தக்ங்களைப் படிப்பதில் ஆழ்ந்த கவனமும் செலுத்தினார். அதன் விளைவாக அதற்கடுத்த வருடத்திலேயே தனது முதல் ஆராய்ச்சிக் கட்டுரையையும் பதிப்பித்தார். அவ்வருடம் சென்னையில் நடந்த இந்திய அறிவியல் மாநாட்டில் இக்கட்டுரையை ஒத்த சொற்பொழிவு மூத்த அறிவியலாளர்களின் மெச்சுதலோடு நடந்தேறியதுடன், அவரது ஆராய்ச்சிப் பயணமும் வெற்றிகரமாகத் தொடங்கியது. மேலும், அதற்கடுத்த வருடம் -- 19வது வயதில், இன்னும் இளங்கலை மாணவராக இருக்கையிலேயே -- மேலும் இரு கட்டுரைகளும் பதிப்பாயின.

1930-ம் ஆண்டு, இந்திய அரசாங்கத்தின் பரிசும் பண உதவியும் பெற்று, சந்திரசேகர் மேல்படிப்புக்காக கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்திற்குப் பயணித்தார்.

விருதுகள்
* Fellow of the Royal Society (1944)
* Henry Norris Russell Lectureship (1949)
* Bruce Medal (1952)
* Gold Medal of the Royal Astronomical Society (1953)
* National Medal of Science award by President Lyndon Johnson (1967)
* Henry Draper Medal (1971)
* Nobel Prize in Physics (1983)
* Copley Medal, the highest honour, of the Royal Society (1984)

சந்திரசேகர் எழுதிய நூல்கள்
* Chandrasekhar, S. (1958) [1939]. An Introduction to the Study of Stellar Structure. New York: Dover. ISBN 0-486-60413-6.
* Chandrasekhar, S. (2005) [1942]. Principles of Stellar Dynamics. New York: Dover. ISBN 0-486-44273-X.
* Chandrasekhar, S. (1960) [1950]. Radiative Transfer. New York: Dover. ISBN 0-486-60590-6.
* Chandrasekhar, S. (1975) [1960]. Plasma Physics. Chicago: The University of Chicago Press. ISBN 0-226-10084-7.
* Chandrasekhar, S. (1981) [1961]. Hydrodynamic and Hydromagnetic Stability. New York: Dover. ISBN 0-486-64071-X.
* Chandrasekhar, S. (1987) [1969]. Ellipsoidal Figures of Equilibrium. New York: Dover. ISBN 0-486-65258-0.
* Chandrasekhar, S. (1998) [1983]. The Mathematical Theory of Black Holes. New York: Oxford University Press. ISBN 0-19-850370-9.
* Chandrasekhar, S. (1990) [1987]. Truth and Beauty. Aesthetics and Motivations in Science. Chicago: The University of Chicago Press. ISBN 0-226-10087-1.
* Chandrasekhar, S. (1995). Newton's Principia for the Common Reader. Oxford: Clarendon Press. ISBN 0-19-851744-0.

சந்திரசேகர் பற்றிய நூல்கள்
* Miller, Arthur I. (2005). Empire of the Stars: Friendship, Obsession, and Betrayal in the Quest for Black Holes. Boston: Houghton Mifflin. ISBN 0-618-34151-X.
* Srinivasan, G. (ed.) (1997). From White Dwarfs to Black Holes: The Legacy of S. Chandrasekhar. Chicago: The University of Chicago Press. ISBN 0-226-76996-8.
* Wali, Kameshwar C. (1991). Chandra: A Biography of S. Chandrasekhar. Chicago: The University of Chicago Press. ISBN 0-226-87054-5.
* Wali, Kameshwar C. (ed.) (1997). Chandrasekhar: The Man Behind the Legend - Chandra Remembered. London: imperial College Press. ISBN 1-86094-038-2.

Courtesy: Wikipedia

சிவாஜி கணேசன் (Sivaji Ganesan)

சிவாஜி கணேசன் (Sivaji Ganesan) (அக்டோபர் 1, 1927 - ஜூலை 21, 2001) புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன் என்பது இவரது இயற்பெயர். இவர், பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.

வாழ்க்கைக் குறிப்பு
'சிவாஜி' கணேசன், சின்னையா மன்றாயர் - ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு மகனாக சீர்காழியில் பிறந்தார். இவர் மனைவி பெயர் கமலா; மகன்கள், ராம்குமார் மற்றும் பிரபு; மகள்கள், சாந்தி மற்றும் தேன்மொழி.

திரைப்பட வாழ்க்கை
'சிவாஜி' கணேசன், திரையுலகுக்கு வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை 'சிவாஜி' கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது.

'சிவாஜி' கணேசன் 300க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள், இரண்டு ஹிந்தித் திரைப்படங்கள் மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார். நல்ல குரல்வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன் ஆகியவை இவரின் சிறப்புகளாகும். நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்பட்டார். எனினும், நாடகத்தின் மூலம் திரைப்படங்களுக்கு அறிமுகமானதாலோ என்னவோ, இவருடைய நடிப்பில் நாடகத்துக்குரிய தன்மைகள் அதிக அளவில் தென்படுவதாகக் குறை கூறுவோரும் உண்டு. குறிப்பாக, அக்கால மேடை நாடகங்களில் தொழில்நுட்பக் குறைபாடுகளின் காரணமாக உணர்ச்சிகளைய் மிகைப்படுத்திக் காட்டினால்தான் பார்ப்பவர்களுக்குப் புரியும்.

இவர் நடித்த மனோகரா, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற திரைப்படங்கள் வசனத்திற்காகப் பெயர் பெற்றவை. இராஜராஜ சோழன், வ. உ. சிதம்பரம் பிள்ளை போன்ற வீரர்களினதும் தேசத் தலைவர்களினதும் பாத்திரங்களை ஏற்றுத் திறம்படச் செய்தார். பாசமலர், வசந்தமாளிகை போன்ற திரைப்படங்கள் மற்றும் பல பக்திப் படங்கள் இவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்புக்காகப் பேசப்பட்டவை.

அரசியல் வாழ்க்கை
1955 வரை திராவிட இயக்க அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்த இவர், 1961 முதல், காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார். 1982ல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ஆனார். 1987ல் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, அதை விட்டு விலகி, தமிழக முன்னேற்ற முன்னணி என்ற புதிய கட்சியொன்றை தொடங்கினார். எனினும் நடிகனாக அவருக்குக் கிடைத்த செல்வாக்கு அரசியலுக்குத் துணைவரவில்லை. இறுதிக்காலத்தில் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார்.

விருதுகளும் கௌரவங்களும்
*ஆப்பிரிக்க - ஆசியத் திரைப்பட விழாவில் (கெய்ரோ,1960), சிறந்த நடிகருக்கான விருது.
*பத்ம ஸ்ரீ விருது (1966)
*பத்ம பூஷன் விருது (1984)
*செவாலியே விருது (1994)
*தாதா சாகேப் பால்கே விருது (1997)
*1962ல் அமெரிக்க நாட்டின் சிறப்பு விருந்தினராக சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் 'ஒரு நாள் நகரத்தந்தையாகக்' கௌரவிக்கப்பட்டார்.

நடித்த திரைப்படங்கள்
* படையப்பா (1999) .... படையப்பாவின் தந்தை வேடம்
* மன்னவரு சின்னவரு (1999)
* பூப்பறிக்க வருகிறோம் (1999)
* என் ஆசை ராசாவே (1998)
* ஒரு யாத்ர மொழி (மலையாளம்) (1997)
* கோபுர தீபம் (1997)
* ஒன்ஸ் மோர் (1997)
* பசும்பொன் (1995)
* எங்கிருந்தோ வந்தான் (1995)
* பாரம்பரியம் (1993)
* சின்ன மருமகள் (1992)
* நாங்கள் (1992)
* முதல் குரல் (1992)
* க்னோக் அவுட் (1992)
* தேவர் மகன் (1992) .... பெரிய தேவராக
* ஞானப் பறவை (1991)
* காவலுக்குக் கெட்டிக்காரன் (1990)
* புதிய வானம் (1988)
* என் தமிழ் என் மக்கள் (1988)
* அன்புள்ள அப்பா (1987)
* வீரபாண்டியன் (1987)
* தாம்பத்தியம் (1987)
* கிருஷ்ணன் வந்தான் (1987)
* குடும்பம் ஒரு கோயில் (1987)
* முத்துக்கள் மூன்று (1987)
* ராஜ மரியாதை (1987)
* ஜல்லிக்கட்டு (1987)
* விஷ்வனாத நாயக்குடு (தெலுங்கு) (1987)
* தாய்க்கு ஒரு தாலாட்டு (1986)
* சாதனை (1986)
* மண்ணுக்குள் வைரம் (1986)
* லக்ஸ்மி வந்தாச்சு (1986)
* ஆனந்தக் கண்ணீர் (1986)
* விடுதலை (1986)
* மருமகள் (1986)
* முதல் மரியாதை(1985) .... மலைச்சாமி வேடம்
* படிக்காதவன் (1985)
* ராஜ ரிஷி (1985)
* பந்தம் (1985)
* நீதியின் நிழல் (1985)
* படிக்காத பண்ணையார் (1985)
* நாம் இருவர் (1985)
* நேர்மை (1985)
* இரு மேதைகள் (1984)
* வாழ்க்கை (1984)
* வம்ச விளக்கு (1984)
* சரித்திர நாயகன் (1984)
* சிரஞ்சீவி (1984)
* எழுதாத சட்டங்கள் (1984)
* தராசு (1984)
* திருப்பம் (1984)
* சிம்ம சொப்பனம் (1984)
* தாவனிக் கனவுகள் (1983)
* உருவங்கள் மாறலாம் (1983)
* சுமங்கலி (1983)
* சந்திப்பு (1983)
* உண்மைகள் (1983)
* மிருதங்கச் சக்கரவர்த்தி (1983)
* நீதிபதி (1983)
* வெள்ளை ரோஜா (1983)
* காஷ்மிர் காதலி (1983)
* வசந்தத்தில் ஒரு நாள் (1982)
* வா கண்ணா வா (1982)
* தியாகி (1982)
* துணை (1982)
* தீர்ப்பு (1982)
* சங்கிலி (1982)
* பரீட்சைக்கு நேரமாச்சு (1982)
* ஊரும் உறவும் (1982)
* ஊருக்கு ஒரு பிள்ளை (1982)
* நெஞ்சங்கள் (1982)
* ஹிட்லர் உமாநாத் (1982)
* கருடா சௌக்கியமா (1982)
* லாரி டிரைவர் ராஜாக்கண்ணு (1981)
* கீழ்வானம் சிவக்கும் (1981)
* கல்தூன் (1981)
* அமரகாவியம் (1981)
* சத்ய சுந்தரம் (1981)
* ரிஷி மூலம் (1980)
* இரத்த பாசம் (1980)
* விஷ்வரூபம் (1980)
* எமனுக்கு எமன் (1980)
* தர்ம ராஜா (1980)
* மோகனப் புன்னகை (1980)
* மாடி வீட்டு ஏழை (1980)
* நான் வாழ வைப்பேன் (1979) .... ரவி வேடம்
* வெற்றிக்கு ஒருவன் (1979)
* திரிசூலம் (1979)
* பட்டாகத்தி பைரவன் (1979)
* நல்லதொரு குடும்பம் (1979)
* நான் வாழவைப்பேன் (1979)
* கவரி மான் (1979)
* இமயம் (1979)
* வாழ்க்கை அலைகள் (1978)
* என்னைப் போல் ஒருவன் (1978)
* ஜெனெரல் சக்கரவர்த்தி (1978)
* ஜஸ்டிஸ் கோபினாத் (1978)
* பைலட் பிரேம்நாத் (1978)
* தியாகம் (1978)
* புண்ணிய பூமி (1978)
* அந்தமான் காதலி (1977)
* சானக்ய சந்திரகுப்தா (தெலுங்கு) (1977)
* அண்ணன் ஒரு கோயில் (1977)
* தீபம் (1977)
* இளைய தலைமுறை (1977)
* நாம் பிறந்த மண் (1977)
* அவன் ஒரு சரித்திரம் (1976)
* உத்தமன் (1976)
* உனக்காக நான் (1976)
* சத்தியம் (1976)
* ரோஜாவின் ராஜா (1976)
* கிரகப் பிரவேசம் (1976)
* டாக்டர் சிவா (1975) .... டாக்டர் சிவா வேடம்
* அன்பே ஆருயிரே (1975)
* அவன் தான் மனிதன் (1975)
* தங்கப்பதக்கம் (1974)
* அன்பைத்தேடி (1974)
* என் மகன் (1974)
* தீர்க்க சுமங்கலி (1974)
* பக்த துகாரம் (தெலுங்கு) (1973) .... சிவாஜி
* கௌரவம் (1973)
* ராஜபாட் ரங்கதுரை
* இராஜராஜசோழன் 1973)
* பாரத விலாஸ் 1973)
* பங்காரு பாபு (தெலுங்கு)(1972)
* ஞான ஒளி (1972) .... அந்தொனி வேடம்
* வசந்த மாளிகை (1972)
* நீதி (1972)
* சவாலே சமாளி (1971)
* மூன்று தெய்வங்கள் (1971)
* சுமதி என் சுந்தரி (1971)
* பாபு (1971)
* குலமா குணமா (1971)
* தங்கைக்காக (1971)
* இரு துருவம் (1971)
* வியட்னாம் வீடு (1970) .... பத்மநாப ஐயர் வேடம்
* விளையாட்டுப் பிள்ளை (1970)
* எங்கள் தங்கம் (1970)
* எங்க மாமா (1970)
* பாதுகாப்பு (1970)
* காவல் தெய்வம் (1969)
* தெய்வ மகன் (1969)
* சிவந்த மண் (1969)
* தங்கச் சுரங்கம் (1969)
* குருதட்சனை (1969)
* தில்லானா மோகனாம்பாள் (1968) .... சிக்கில் சண்முகசுந்தரம் வேடம்
* உயர்ந்த மனிதன் (1968)
* கௌரி (1968)
* எங்க ஊரு ராஜா (1968)
* திருமால் பெருமை (1968)
* கலாட்டா கல்யாணம் (1968)
* என் தம்பி (1968)
* இரு மலர்கள் (1967)
* கந்தன் கருணை (1967) .... வீரபாகு வேடம்
* தங்கை (1967) .... மதன் வேடம்
* திருவருட்செல்வர்(1967)
* மோட்டார் சுந்தரம் பிள்ளை (1966) .... சுந்தரம் பிள்ளை
* மகாகவி காளிதாஸ் (1966)
* செல்வம் (1966)
* திருவிளையாடல் (1965) .... சிவனின் அவதாரங்களாக
* சாந்தி (1965)
* பழனி (1965)
* அன்புக்கரங்கள் (1965)
* புதிய பறவை (1964)
* கை கொடுத்த தெய்வம் (1964)
* நவராத்திரி (1964)
* ராமதாசு (தெலுங்கு) (1964)
* பச்சை விளக்கு (1964)
* இருவர் உள்ளம் (1963) .... செல்வம் வேடம்
* கர்ணன் (1963) .... கர்ணன் வேடம்
* பார் மகளே பார் (1963)
* ரத்த திலகம் (1963) .... குமார் வேடம்
* அறிவாளி (1963)
* குலமகள் ராதை (1963)
* குங்குமம் (1963)
* அன்னை இல்லம் (1963)
* பலே பாண்டியா (1962)
* பார்த்தால் பசி தீரும் (1962)
* பவித்ர பிரேமா (தெலுங்கு) (1962)
* ஆலயமணி (1962)
* நிச்சய தாம்பூலம் (1962)
* படித்தால் மட்டும் போதுமா (1962)
* வடிவுக்கு வளைகாப்பு (1962)
* கப்பலோட்டிய தமிழன் (1961) .... வ.உ சிதம்பரம்பிள்ளை வேடம்
* பாலும் பழமும் (1961)
* பாப்பா பரிகாரம் (1961)
* பாசமலர் (1961) .... ராஜசேகரன் வேடம்
* பாவமன்னிப்பு (1961) .... ரஹிம் வேடம்
* புனர் ஜென்மம் - (1961)
* படிக்காத மேதை (1960)
* பாவை விளக்கு (1960)
* இரும்புத்திரை (1960)
* தெய்வப் பிறவி (1960)
* பில்லலு தெச்சின சாலனி ராஜ்ஜியம் (தெலுங்கு) (1960)
* மரகதம் (1959) .... வரேந்திரன்
* வீரபாண்டியக் கட்டப்பொம்மன் (1959) .... கட்டப்பொம்மன் வேடம்
* பாகப்பிரிவினை (1959)
* தாயைப்போல் பிள்ளை நூலைப்போல் சேலை (1959)
* தங்கப்பதக்கம் (1959)
* சபாஷ் மீனா (1958)
* ஸ்கூல் மாஸ்டர் (1958)
* சாரங்கதார (1958)
* உத்தமபுத்திரன் (1958)
* காத்தவராயன் (1958)
* அம்பிகாபதி (1957) .... அம்பிகாபதி வேடம் * மக்களை பெற்ற மகராசி (1957) .... செங்கோடையன்
* தங்கமலை இரகசியம் (1957)
* வணங்காமுடி (1957)
* தால வன்சானி வீருடு (தெலுங்கு) (1957)
* புதையல் (1957)
* பாக்யவதி (1957)
* அமரதீபம் (1956) .... அசோல்
* பெண்ணின் பெருமை(1956)
* ரங்கூன் ராதா (1956) .... தர்மலிங்க முதலியார் வேடம்
* தெனாலி இராமன் (1956) .... தெனாலி இராமக்கிருஷ்ணா
* கள்வனின் காதலி (1955) .... முத்தையன்
* மங்கையர் திலகம் (1955) .... வாசு வேடம்
* முதல் தேதி (1955) .... சிவஞானம்
* கூண்டுக்கிளி (1954)
* அந்த நாள் (1954) (சிவாஜி கணேசன் வேடம்)
* எதிர்பாராதது (1954) .... சுந்தர் வேடம்
* மனோகரா (1954) .... மனோகரா வேடம்
* அன்பு (1954)
* பூங்கோதை (1954)
* பர்தேசி (1953) .... ஆனந்த் வேடம்
* பெம்புடு கொடுக்கு (தெலுங்கு) (1953) .... மோகன் வேடம்
* பராசக்தி (1952) .... குணசேகரன் வேடம்

பாரதிதாசன் (Barathidasan)

பாரதிதாசன் (ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழாசிரியராக பணியாற்றிய இவர் சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார். பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழ் நடத்தி வந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு
புரட்சிகவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். கவிஞரின் இயற் பெயர் சுப்புரத்தினம். 1920 ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பாரை மணந்து கொண்டார்.

இவர் சிறுவயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். ஆயினும் தமிழ்ப் பள்ளியிலேயே பயின்ற காலமே கூடியது. தமது பதினாறாம் வயதிலியே கல்வே கல்லூரியில் தமிழ்ப் புலமைத் தேர்வு கருதிப் புகுந்தார். தமிழ்ப் மொழிப் பற்றும் முயற்சியால் தமழறிவும் நிறைந்தவராதலின் இரண்டாண்டில் கல்லுரியிலேயே முதலாவதாகத் தேர்வுற்றார். பதினெட்டு வயதிலேயே அவரின் சிறப்புணர்ந்த அரசியலார் அவரை அரசினார் கல்லூரித் தமிழாசிரியாரானார்.

இசையுணர்வும் நல்லெண்ணமும் அவருடைய உள்ளத்தில் கவிதையுருவில் காட்சி அளிக்கத் தலைப்பட்டன. சிறு வயதிலேயே சிறுசிறு பாடல்ளை அழகாகச் சுவையுடன் எழுதித் தமது தோழர்கட்குப் பாடிக் காட்டுவார்.

நண்பர் ஒருவரின் திருமணத்தில் விருத்துக்குப் பின் பாரதியாரின் நாட்டுப் பாடலைப் பாடினார். பாரதியாரும் அவ்விருத்துக்கு வந்திருந்தார். ஆனால் கவிஞருக்கு அது தெரியாது. அப் பாடலே அவரை பாரதியாருக்கு அறிமுகம் செய்து வைத்தது.

தன் நண்பர்கள் முன்னால் பாடு என்று கூற எமது கவிஞர் "எங்கெங்குக் காணினும் சக்தியடா" என்று ஆரம்பித்து இரண்டு பாடலை பாடினார். இவரின் முதற் பாடல் பாரதியாராலேயே சிறீ சுப்பிரமணிய கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது என்றெழுதப்பட்டு சுதேச மித்திரன் இதழுக்கு அனுப்பப்பட்டது.

புதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில் "கண்டழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், பாரதிதாசன் என பல புனை பெயர்களில் எழுதி வந்தார்.

பிரபல எழுத்தாளரும் திரைப்படக் கதாசிரியரும் பெரும் கவிஞருமான பாரதிதாசன் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். புதுச்சேரி சட்டமனற்ற உறுப்பினராக 1954 ஆம் ஆண்டு தேர்நதெடுக்கப்பட்டார்.

1946 ஜூலை 29 இல் அறிஞர் அண்ணா அவர்களால் கவிஞர் 'புரட்சிக்கவி" என்று பாராட்டப்பட்டு ரூ.25000 பொற்காசும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

பாரதிதாசன் அவர்கள் நகைச்சுவை நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான "பிசிராந்தையார்" என்ற நாடக நூலுக்கு 1970 இல் சாகித்ய அகாதமியின் விருது கிடைத்தது. இவருடைய படைப்புக்கள் தமிழ்நாடு அரசினரால் 1990 இல் பொது உடமையாக்கப்பட்டது.

பாரதிதாசன் எழுதிய புகழ் பெற்ற சில வரிகள்
புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்

தமிழுக்கு அமுதென்று பேர் - அந்த
தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்

பாரதிதாசனின் ஆக்கங்கள்
* பாரதிதாசனின் கவிதைகள் (கவிதைத்தொகுப்பு)
* பாண்டியன் பரிசு (காப்பியம்)
* எதிர்பாராத முத்தம் (காப்பியம்)
* குறிஞ்சித்திட்டு (காப்பியம்)
* குடும்ப விளக்கு (கவிதை நூல்)
* இருண்ட வீடு (கவிதை நூல்)
* அழகின் சிரிப்பு (கவிதை நூல்)
* தமிழ் இயக்கம் (கவிதை நூல்)
* இசையமுது (கவிதை நூல்)
* அகத்தியன் விட்ட புதுக்கரடி
* பாரதிதாசன் பதிப்பகம் அமைதி
* செந்தமிழ் நிலையம்,இசையமுதம் (முதல் பாகம்)
* பாரதசக்தி நிலையம் (1944)
* இசையமுதம் (இரண்டாம் பாகம்)
* பாரதசக்தி நிலையம் (1952) இரணியன் அல்லது இணையற்ற வீரன் (நாடகம்)
* குடியரசுப் பதிப்பகம் (1939)
* இருண்ட வீடு,முத்தமிழ் நிலையம் இளைஞர் இலக்கியம்
* பாரி நிலையம் (1967) உரிமைக் கொண்டாட்டமா?
* குயில் (1948) எதிர்பாராத முத்தம்
* வானம்பாடி நூற்பதிப்புக் கழகம் (1941)
* எது பழிப்பு
* குயில் (1948) கடவுளைக் கண்டீர்!
* குயில் (1948)
* கண்ணகி புரட்சிக் காப்பியம்
* அன்பு நூலகம் (1962) கதர் ராட்டினப் பாட்டு
* காசி ஈ.லட்சுமண பிரசாத் (1930)
* கற்புக் காப்பியம்
* குயில் (1960)
* காதல் நினைவுகள்,செந்தமிழ் நிலையம் (1969)
* காதல் பாடல்கள்,பூம்புகார் பிரசுரம் (1977)
* காதலா - கடமையா?,பாரதிதாசன் பதிப்பகம் (1948)
* குடும்ப விளக்கு (ஒரு நாள் நிகழ்ச்சி)பாரதிதாசன் பதிப்பகம் (1942)
* குடும்ப விளக்கு (திருமணம்)பாரதிதாசன் பதிப்பகம் (1950)
* குடும்ப விளக்கு (மக்கட் பேறு)பாரதிதாசன் பதிப்பகம் (1950)
* குடும்ப விளக்கு (விருந்தோம்பல்)
* முல்லைப் பதிப்பகம் (1944)
* குடும்ப விளக்கு (முதியோர் காதல்)
* பாரதிதாசன் பதிப்பகம் (1950)
* குயில் பாடல்கள்பூம்புகார் பிரசுரம் (1977)
* குறிஞ்சித் திட்டு,பாரி நிலையம்
* சஞ்சீவி பர்வதத்தின் சாரல்,பாரதிதாசன் பதிப்பகம் (1949)
* சேர தாண்டவம் (நாடகம்),பாரதிதாசன் பதிப்பகம் (1954)
* தமிழச்சியின் கத்தி,பாரதிதாசன் பதிப்பகம் (1949)
* தமிழியக்கம்,செந்தமிழ் நிலையம் தாழ்த்தப்பட்டோர் சமத்துவப் பாட்டு
* திராவிடர் புரட்சித் திருமணத் திட்டம்
* தேனருவி இசைப் பாடல்கள்
* பாரதிதாசன் பதிப்பகம் (1955)
* நல்ல தீர்ப்பு (நாடகம்),முல்லைப் பதிப்பகம் (1944)
* நீலவண்ணன் புறப்பாடு
* பாண்டியன் பரிசு
* முல்லைப் பதிப்பகம் (1943) பாரதிதாசன் ஆத்திசூடி
* பாரதிதாசன் கதைகள்முரசொலிப் பதிப்பகம் (1957)
* பாரதிதாசன் கவிதைகள்,கடலூர் டி.எஸ்.குஞ்சிதம் (1938)
* பாரதிதாசன் கவிதைககள் (முதற்பாகம்)
* குடியரசுப் பதிப்பகம் (1944) பாரதிதாசன் கவிதைகள் (இரண்டாம் பாகம்)
* பாரதிதாசன் பதிப்பகம் (1952)
* பாரதிதாசன் நாடகங்கள்
* பாரி நிலையம் (1959) பாரதிதாசன் பன்மணித் திரள்
* முத்தமிழ்ச் செல்வி அச்சகம் (1964)
* பிசிராந்தையார், பாரி நிலையம் (1967)
* புரட்சிக் கவி,துரைராசு வெளியீடு (1937)
* பெண்கள் விடுதலை
* பொங்கல் வாழ்த்துக் குவியல்,பாரதிதாசன் பதிப்பகம் (1954)
* மணிமேகலை வெண்பா
* அன்பு நூலகம் (1962) மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியர் துதியமுது
* முல்லைக் காடு,காசி ஈ.லட்சுமண பிரசாத் (1926)
* கலை மன்றம் (1955) விடுதலை வேட்கை,
* உயிரின் இயற்கை,மன்றம் வெளியீடு (1948)
* வீட்டுக் கோழியும் - காட்டுக் கோழியும்,குயில் புதுவை (1959)
* தமிழுக்கு அமுதென்று பேர்
* வேங்கையே எழுக ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது
* புகழ் மலர்கள் நாள் மலர்கள்
* தலைமலை கண்ட தேவர் (நாவலர்கள்)பூம்புகார் பிரசுரம் (1978)

மறைவு
கவிஞர் 21.4.64ல் இயற்கை எய்தினார். மலர்மன்னன் என்ற மகனும் மூன்று பெண்குழந்தைகளும் உள்ளனர்.

வீரபாண்டிய கட்டபொம்மன் (Veerapandiya Kattabomman)

உலகின் உயிரின பரிணாம வளர்ச்சியில் மனிதன் என்ற படைப்பு மிக உன்னதமாகக்கருதப்படுகின்றது. உலகம் தோன்றியது முதல் இன்றைய காலகட்டம் வரை பிறந்து மறைந்தவர்கள் எல்லோரும் நம் நினைவில் நிற்கமுடியாத நிலை. ஆனால் காலத்தால் மறைக்க முடியாத மனிதர்கள் இன்றும் நினைவில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். அத்தகைய சிறப்பை அவர்கள் பெற்றதற்கு காரணம் அவர்களின் தனித்தன்மை வாய்ந்த அவர்களின் குணாதியங்கள்கள்தான். அப்படி வாழ்ந்து மறைந்த மாவீரனாக நம் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களில் ஒருவர் வீரபாண்டிய கட்டபொம்மன்.

03-01-1760 ல் அழகிய வீரபாண்டியபுரத்தில் (இன்றைய ஒட்டப்பிடாரம்)பிறந்தார். இவருடைய தந்தை ஜெகவீரபாண்டியன். தாய் ஆறுமுகத்தம்மாள். கட்டபொம்மனின் முன்னோர்கள் தெலுங்கு தேசத்தை சேர்ந்தவர்கள. விஜயநகர பேரரசினரால் புலம் பெயர்ந்தவர்கள் எனக்கருதபபடுகின்றது. .இவர்களின் மூனறு புதல்வர்கள்தான் கருத்தையா என்ற வீரபாண்டிய கட்டபொம்மன், தளவாய் குமாரசாமி என்ற துரைசிங்கம் மற்றும் செவத்தையா என்ற ஊமைத்துரை.

இவர்களின் முன்னோர்கள் தெலுங்கு நாட்டின் பிரசித்திபெற்றவர்கள். கெட்டி பொம்முலு என வீரத்துக்கு அடையாளமாக சொல்லப்படும் சாஸ்த்தா அய்யணசாமி என்ற தெய்வத்தின் பெயரால் அழைக்கப்பெற்றவர்கள். அந்த வீரத்துக் காவல் தெய்வமாகக்கருதப்பட்டதனால் என்னவோ பிழைக்க வந்த வெள்ளையர்களுக்கு கட்டபொம்மன் ஒரு சிம்மசொப்பனமாகத்திகழ்ந்தார்.

சங்க காலத்தமிழ் காப்பியங்களில் வீரத்தமிழ்மன்னர்கள் தம் நாட்டு மக்களின் துயர் தீர்க்க தன்னுயிரையும் தர இசைந்தார்கள். தாய்ப்புலி தான் ஈன்ற குட்டிகளை தன்னுயிர் போனாலும் கவர்ந்து செல்ல யாருக்கும் அனுமதியளிக்காது. அவ்வாறே ஒரு மன்னன் தன் நாட்டு மக்களை காக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக அன்றைய தமிழ் மன்னர்கள் திகழ்ந்தார்கள் என புறநானூற்றுப்பக்கங்கள் நமக்கு பறைசாற்றுகின்றன. இதற்கு உதாரணமாகத்திகழந்தவர் கட்டபொம்மன். தம் எதிர்கால மக்கள் சுதந்திரமாக வாழவேண்டுமென்பதற்காக கொண்டகொள்கைகளை கடைசிவரை காப்பாற்றி தமிழகத்தின் வரலாற்றில் ஆழமாக பதியப்பட்டு நிற்கின்றார்.

பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட கட்டபொம்மனின் மூதாதையர்களில் ஒருவர் காலத்தில் நடந்ததாகக்கருதப்படும் கதைகளில் ஒன்று இன்றும் பேசப்படுகின்றது. ஒரு நாள் வேட்டையாடும் நேரத்தில், வேட்டை நாய்களினால் துரத்தப்பட்டு வந்த முயலொன்று குறிப்பிட்ட இடத்தில் வந்தவுடன் வேட்டை நாய்களை நோக்கி முயல் சீறிப்பாய்ந்ததாகவும் அதைக்கண்ணுற்ற அன்றைய கட்டபொம்மர் அதுவே தாம் கோட்டை கட்டுவதற்கு உகந்த இடம் எனத்தீiமானித்து அவ்விடத்திலேயே பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை நிறுவியதாகவும் கூறப்படுகின்றது. கருத்தையா என்ற வீரபாண்டியன் 02.02.1790ல் கட்டபொம்மர்களின் வாரிசாக கருதப்பட்டு ஆட்சி அமைக்க அன்றைய மதுரைப்பாளையர்க்காரர்களால் அனுமதிக்கப்பட்டார். கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியின் மன்னனாகப் பொறுப்பேற்றார்.

1736 க்கு முன் ஏறத்தாழ இரண்டு நூற்றாண்டுகள் மதுரை நாயக்கர் வம்ச அரசர்களால் பரிபாலனம் செய்யப்பட்டு வந்தது. அதன் பிறகு சந்தாப் சாகேப் ஆர்கோட் என்பவரால் மதுரை அங்கு கடைசியாக ஆண்ட ராணியிடமிருந்து பறிக்கப்பட்டு நவாப் ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது. இக்காலகட்டத்தில் மக்களின் வரிப்பணம் பெருமளவில் சுரண்டப்பட்டதின் காரணமாகவும் மக்கள் மிக்க அதிருப்தி கொண்டிருந்தனர்.

அத்துடன் இஸ்லாமிய ஆட்சிமுறையை பெரும்பாலான பாளையக்காரர்கள் எதிர்க்கத்துணிந்தனர். இத்தகைய போக்குகள் இறுதியில் ஆர்க்காடு அரசினை வெள்ளையர்களிடம் நாட்டை அடகு வைக்கும் நிலைக்கு கொண்டு சென்றது. சரியான தருணம் பார்த்திருந்த ஆங்கிலேயர்கள் ஆர்க்காடு நவாப் அரசுக்கு கொடுத்துள்ள கடனுக்காக நவாப்பிடமிருந்து வரிவசுலிக்கும் அதிகாரத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டு மக்களிடமிருந்து தாறுமாறாக வரி என்ற பெயரில் கொள்ளையடிக்க ஆரம்பித்தார்கள்.

வரியை மக்களிடமிருந்து வாங்கிக்கொடுக்காத பாளையக்காரர்கள் கொடுமைக்காளானார்கள். இத்தகைய நிலை ஏறத்தாழ 40,50 ஆண்டுகள் நீடித்த நிலையில்தான் பாஞ்சாலஞ்குறிச்சியில் கட்டபொம்மன் ஆட்சிக்கு வந்தார். மக்களின் வரிப்பணம் பாலாக்கப்பட்டு நிர்வாகம் தறிகெட்டுக்கிடந்த ஒரு காலகட்டத்தில் மக்களை புரட்சியிலிருந்து ஒடுக்குவதற்கு ஆங்கிலேயர்கள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். இத்தகைய போக்கு பிரச்சனைகளை மேலும் மோசமாக்குவதாக அமைந்தது.

இத்தகைய குழப்பமான நிலையில் ஆங்கிலேயர்கள் தங்களுக்கேயுரித்தான பிரித்தாழும் சதிவேலைகளை மேற்கொண்டு மக்களிடம் ஒற்றுமையின்மையை ஏற்படுத்தினார்கள்.

இக்காலகட்டத்தில் ஆஙகிலேயரின் ஒடுக்குமுறைக்கு சற்றும் சளைக்காமல் கட்டபொம்மன் அவர்களுக்கு வரி சேகரித்துக் கொடுப்பதை நிறுத்தினார். புல அச்சுறுத்தலுக்களுக்கும் பணியாமல் கட்டபொம்மன் தன் நிலையில் உறுதியாக இருந்தார். இதனால் கட்டபொம்மனை வஞ்சக வலைவிரித்து கவிழ்க்கத் தருணம் பார்த்திருந்தார்கள். கட்டபொம்மனின் மந்திரியாக செயல்பட்டு வந்தவர் தானாதிப்பிள்ளை அவர்கள்.

பிரதான தளபதியாக அமைந்தவர் சுந்தரலிங்கம் என்று அறியப்பட்டு பாஞ்சாலங்குறிச்சிக்காக தன் இன்னுயிரைத் தியாகமாக்கியவர். மதுரை பாளையக்காரர்களால் அணைவரிடமிருந்தும் கப்பம் பெற்றுக்கொண்ட ஆங்கிலேயர்களால் கட்டபொம்மனிடம் தங்கள் கொட்டம் பலிக்காமல் அவமானம் அடைந்தனர். அதனால் சமாதானம் பேசுவது என்ற போர்வையில் கட்டபொம்மனுக்கு தூது அனுப்பினார்கள்.

பேசுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இடம் இராமநாதபுரம் சேதுபதி ராஜா மாளிகை. பேச்சுவார்த்தைக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டவர் ஜாக்ஸன் துரை. கட்டபொம்மன், தானாதிபிள்ளை மற்றும் தன் குழுவினருடன் இராமநாதபுரம் சென்றார். அங்கே நடந்த பேச்சுவார்தை தோல்வியாகி கைகலப்பில் முடிந்தது. ஆங்கிலேயரின் இந்த திட்டமிட்ட வஞ்சக வலையில் சிக்காமல் தன் வீரத்திறமையால் அங்கிருந்து தப்பினார். ஆனால் தானாதிப்பிள்ளை கைது செய்யப்பட்டார்.

இந்த நடவடிக்கைக்காக ஜாக்ஸன் துரை பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதற்காக அமைக்கப்பட்ட கமிட்டி ஆலோகனையின்பேரில் திருநெல்வேலி கலெக்டர் கட்டபொம்மனுக்கு வரி கொடாமைக்கு காரணம் கேட்டு கடிதம் 16..03.1799ல் அனுப்பினார். இதற்கு கட்டபொம்மன் வரி செலுத்த வேண்டிய பணம், தானியங்கள் எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டதாக பதில் அனுப்பினார்.

கட்டபொம்மனின் தலைவணங்காத்தன்மை வெள்ளையர்களை மேலும் கோபத்துக்குள்ளாக்கியது. கட்டபொம்மனை நாட்டின் பொது எதிரியாக்கி தீர்மானம் நிறைவேற்றினர். தங்கள் நயவஞ்சக திட்டத்துக்கு கட்டபொம்மனுக்கு எதிராக எட்டப்பனை தேர்ந்தெடுத்து கட்டபொம்மனின் ஒவ்வொரு நடவடிக்கையும் ஆராய்ந்து சரியான தருணம் பார்த்து இராணுவத்தளபதி பாணர்மேன் தலைமையில் பாஞ்சாலம்குறிச்சி கோட்டையை தகர்க்கும் திட்டமத்தை உருவாக்கி,. கேர்னல் கொலினிஸ் தலைமையில் கோட்டையின் நாலாபக்கமும் தாக்குதல் நடத்தினார்கள்.

வெகு சுலபம் என எதிர்பார்த்த கொலின்ஸ் தாக்குதலை சமாளிக்கமுடியாமல் பின்வாங்கி மேலும் ஆயுதங்கள் தேவை என செய்தி அனுப்பினார். இதைப்பயன்படுத்தி கட்டபொம்மன் கோட்டையை விட்டு தப்பிச்சென்றார். பெருத்த ஏமாற்றத்துக்குள்ளான வெள்ளையர் கட்டபொம்மன் தலைக்கு விலை வைத்தார்கள். தானாதிப்பிள்ளை முதலிய 16 பேரை கைது செய்து அழைத்துச்சென்றார்கள். கைது செய்யப்பட்ட தானாதிபிள்ளையின் தலையை வெட்டி பொது மக்கள் பார்வைக்கென பொது இடத்தில் வைத்தார்கள் கட்டபொம்மன் புதுக்கோட்டை ராஜாவிடம் தஞ்சம் புகுந்தார். ஆனால் வெள்ளையரின் வஞ்சனையின் காரணமாக கட்டபொம்மன் சரணடையவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

16.10.1799 ல் கைது செய்யப்பட்டு மூன்று வாரங்களுக்குப்பிறகு, இன்றைய தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு என்ற இடத்தில் புளியமரத்தில் தூக்கிலிடப்பட்டார். அவருடன் சேர்ந்து தங்கள் இன்னுயிரைத்தந்த வீர மறவர்கள் என்றென்றும் போற்றுதற்குறியவர்கள்.

கட்டபொம்மனின் வீழ்ச்சிக்கு காரணகர்த்தாவாக விளங்கிய எட்டப்பன், எட்டயபுர ராஜாவாக ஆக்கப்பட்டு அவருக்கு சர் பட்டம் வழங்கப்பட்டது. பாஞ்சாலஞ்குறிச்சி கோட்டை கொள்ளையடிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டது. ஆனால் வீரபாண்டியகட்டபொம்மன் என்ற மாமனிதனின் பெயர் உலகம் உள்ளவரை நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. முப்பத்து ஒன்பது ஆண்டுகளே வாழ்ந்த அவரின் தியாகத்தை போற்றுவோமாக.

கட்டபொம்மனின் நினைவு என்றும் போற்றத்தக்க வகையில் கயத்தாற்றில் அவருடைய சிலையும், பாஞ்சாலஞ்குறிச்சியில் கோட்டையும் நிலைபெற்றுள்ளது.

விடுதலைக்கு விலையாக பாஞ்சாலஞ்குறிச்சி என்ற ஊரும் கோட்டையும் அன்று வெள்ளையர்களால் மண்மேடுகளாகப்பட்டது. இந்திய சரித்திரத்தில் ஜல்லியன் வாலாபாக் படுகொலை மிகப்பெரியதாக கருதப்படுகின்றது. அகைவிட பலமடங்கு பெரிய தியாகங்களை தமிழர்கள் இந்திய விடுதலைக்காக ஆற்றியுள்ளனர் என்பதற்கு பாஞ்சாலஞ்குறிச்சி ஒரு உதாரணமாகும்.

மதுரைக்கும் தூத்துக்குடிக்கும் இடையே குறுக்குச்சாலை என்னும் ஊருக்கு அருகே இருக்கிறது வீரபாண்டிய கட்டபொம்மன் கோலோச்சிய பாஞ்சாலங்குறிச்சி. 36 ஏக்கரில், 36 அடி உயர மதில் சுவர்களுக்குள் கம்பீரமாக காட்சி தந்த கோட்டையிலும் பாஞ்சாலங்குறிச்சி கிராமத்திலும் தற்போது எஞ்சி இருப்பது தரைமட்டமான சிதிலங்கள்தான். வெள்ளையர்கள் கோட்டையும் மதில் சுவர்களையும் சின்னாபின்னமாக்கிவிட்டுச் சென்றுவிட்டார்கள்.

தமிழக அரசு அங்கே ஒரு நினைவிடத்தை எழுப்பி பராமரித்து வருகிறது. ஏறக்குறைய 250 ஆண்டுகளுக்கு முந்தைய கோட்டையின் தரைப்பகுதி மட்டும் தற்போது மிச்சமுள்ளது. அதைச் செப்பனிட்டு பராமரிக்கும் வேலையை தொல்பொருள் ஆய்வுக்கழகம் மேற்கொன்டு வருகிறது. திருச்செந்தூரை நோக்கி செல்லும் 2 மைல் நீள சுரங்கப்பாதையின் முகப்பையும் காணலாம். அந்த பாதை தற்போதும் இருப்பதாகக் கூறுகிறார்கள்.

சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி (Rajagopalachari)

சி. இராஜகோபாலாச்சாரி (1878 - 1972) தமிழகத்தில் சேலம் நகரில் பிறந்த இந்திய சுதந்திரப் போராட்ட வீரர். இராஜாஜி என்று அழைக்கப்பட்டவர். இந்திய தேசிய காங்கிரஸில் பெரும் பங்கு வகித்தவர். 1952 வரையில் கேரளம், தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகம் இணைந்த பகுதிகளைக் கொண்ட சென்னை மாகாணத்தின் முதலமைச்சராகப் பணியாற்றினார். சுதந்திரத்திற்குப் பின்னர் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக பொறுப்பாற்றினார்.

பிற்காலத்தில் இந்திரா காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக சுதந்திரா கட்சியினைத் துவங்கினார். இக்கட்சியுடன் கூட்டணி அமைத்து 1967 ல் திராவிட முன்னேற்ற கழகம் தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது. கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்த போதும் பெரியார் ஈ. வே. இராமசாமியுடன் தமது கடைசிக் காலம் வரையில் நட்பு பாராட்டியவர்.